Wednesday, June 22, 2005

டயப்பர் லிங்க் - 348

வருடம் 2005. என்னுடன் ப்யூர் ஹம்பர்க் என்பவர் மளிகைக்கடைக்கு வருவார். அவருடன் ஒருநாள் குஜராத்தி குரோஸரிஸ் கடையில் பேசிக்கொன்றிருந்தேன்.

தன்னைப் பற்றிக் கூறுகையில் தான் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவரென்றும் தன் மனைவியும் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவரென்றும் கூறினார். உடனே என் வயிற்றுக்குள் வழக்கமான அஸிட் அரித்தது போன்ற உணர்ச்சி.

நான் (=தமிழ் நாய்): "நீங்கள் 2004-ல் குழந்தைப்பேறுக்காக குறை எட்டு மாதத்திலேயே அல்டிமேட் அல்ப்ஸிலேதானே குழந்தைப் பெற்றீர்கள்?"

ஹம்பர்க்: "ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?"

நாய்: "அதன் பிறகு குழந்தை ஐசியூவிலே இருந்தது அல்லவா?"

ஹம்பர்க்: "ஆமாம், ஆனால் எப்படி இது உங்களுக்கு...?"

நாய்: "அதே போல நர்ஸரியிலும் இருந்தது அல்லவா?"

ஹம்பர்க்: "முதலில் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கூறுங்கள்"

நாய்: "பிறகு சொல்கிறேன். உங்கள் குழவி பிழைக்குமா என்று மெகா ப்ராட்டிடம் கேட்ட போது, அவர் உங்களிடம் "விழகு திருப்பிப் போட்டால் குழவி என்று வருகிறது. முயற்சி செய்" என்று கூவினார் அல்லவா?"

ஹம்பர்க் (பொறுமை இழந்து) : "இதற்கு மேல் உங்களுடன் பேச வேண்டுமானால் இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்பதைக் கூவ வேண்டும்!"

நாய்: இதைப் பற்றியெல்லாம் நீங்கள் 2004-ல் பபில் டோக்கில் எழுதியிருந்தீர்கள். அதை நான் படித்தேன்."

ஹம்பர்க்: "அதைப் பற்றி நானே மறந்து விட்டேன். நீங்கள் எப்படி வேறு வேலையில்லாமல் நினைவில் வைத்து என்னையும் அறுக்கிறீர்கள்?"

நாய்: "அந்தக் கட்டுரையில் மேலே கூறியதையெல்லாம் எழுதிய நீங்கள் உங்கள் குழந்தைக்கு வீட்டுக்கருகாமையில் கிண்டர்கார்டினில் போதுமான காலியிடம் இல்லாததால் தொலைவிலே சைல்ட் கேர் இலே சேர்த்துக் கொள்ளவேண்டியிருந்தது என்றும் கூறினீர்கள். உங்கள் குழந்தையின் கிண்டர்கார்டினில் இருந்த இன்னொரு குழந்தையின் அம்மாவை இருவரும் விவாகரத்துப் பெற்றபின் மணம் புரிந்ததாகவும் கூறினீர்கள். இப்போது பேசுகையில் நீங்கள் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவர் என்றும் உங்கள் மனைவியும் ந்யூ பபில் இனைச் சேர்ந்தவர் என்றும் கூறினிர்கள். காக்கா இருக்க, பனம்பழம் விழுவதுண்டல்லவா? உடனே நான் படித்த உங்கள் கட்டுரை நினைவுக்கு வந்து அகப்பட்டால் அறுக்காமல் விடாதே என்றது. ஆகவே கெட்டேன்."

காலன் வரிசைப்படிப் பார்த்தால் இது என் நினைவிலிருக்கும் முன்னூத்தி நாப்பத்தெட்டாவது டயப்பர் லிங்க் ஆகும். டயப்பர் லிங்குக்கான சொற்கல் இங்கு: "நான் ந்யூ ஹம்பர்க், என் மனைவியும் ந்யூ ஹம்பர்க்"

மேலும் பிராண்டுவேன்.

(என்றென்றும்) வம்புடன்
தமிழ்நாய்.